தனுஷின் இட்லி கடை பட பர்ஸ்ட்லுக் வெளியீடு; லிங்க் உள்ளே.!



dhanush-starring-idly-kadai-trailer-out-now

 

தனுஷ் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.

 

டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைத்து தயாரிக்கும் திரைப்படம் இட்லி கடை (Idly Kadai). நடிகர் தனுஷின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் இட்லி கடை படத்தில், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், பிரகாஷ் ராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

இட்லி கடை

தனுஷின் பவர்பாண்டி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பு & வெற்றியை அடைந்த நிலையில், இட்லி கடை திரைப்படமும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் வெளியீடு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

பர்ஸ்ட்லுக் வெளியீடு

ஜிவி பிரகாஷ் குமார் இசையில், கிரண் கௌசிக் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் முதற்பார்வை காட்சிகள் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது அவை வெளியாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 10 ம் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க: பாட்டில் ராதா படத்தில் இடம்பெற்ற "நா நா குடிகாரன்" பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!