வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!



Madurai Thiruparankundram Rajinikanth Fans Prayer 

 

வேட்டையன் திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டவும், ரஜினிகாந்த் 100 வயது வரை நீடூடி வாழவும் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம், அக்.10 ம் தேதியான நாளை உலகெங்கும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகும் வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: Vettaiyan Trailer: அனல் பறக்க மாஸ் காண்பித்த ரஜினிகாந்த்; "வேட்டையன்" படத்தின் ட்ரைலர் இதோ.!

சமீபத்தில் உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் உடல்நலம் தேறி வீடு திரும்பி இருந்தார். தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

சிறப்பு பூஜை

இந்நிலையில், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்திய ரஜினி ரசிகர்கள், மண்சோறு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து உடல்நலத்துடன் இருக்க வேண்டும், வேட்டையன் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டுதல் முன்வைத்து மண்சோறு சாப்பிட்டு இருக்கின்றனர். எப்போதுமே 2 முதல் 3 நபர்களே மண்சோறு சாப்பிடும் நிலையில், தற்போது 4 பேர் சாப்பிட்டு இருக்கின்றனர். 

ரூ.1000 கோடி வசூலை எட்டும்

இந்த விஷயம் குறித்து ரசிகர்கள் தெரிவிக்கையில், "வேட்டையன் திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்ட வேண்டும் என ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு இருக்கின்றனர். திருப்பரங்குன்றம் முருகனின் அருள் அவருக்கு உண்டு. படம் வெற்றிபெறும்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் ரஜினி.. நாளை வெளியாகிறது வேட்டையன் பட ட்ரைலர்.!