மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனையில் ரஜினி.. நாளை வெளியாகிறது வேட்டையன் பட ட்ரைலர்.!
வேட்டையன் படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ரமேஷ் திலக், அபிராமி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: Vettaiyan: வேட்டையன் படத்தின் முதல் பாடல் வெளியீடு; மாஸ் காண்பித்த மனசிலாயோ.!
நாளை ட்ரைலர் வெளியீடு
இப்படம் 10 அக்டோபர் 2024 அன்று வெளியாகிறது. படம் ரூ.160 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. வேட்டையனின் பட ரிலீசுக்காக, கங்குவா திரைப்படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை வேட்டையன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் காட்சிகள் படக்குழு சார்பில் வெளியிடப்படுகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் படம் தொடர்பான அப்டேட் ரசிகர்களுக்கு நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "The New Me" - விவாகரத்துக்கு பின் புதிய ஆளாக மாறிய ஜெயம் ரவி?.. அவரே கூறிய பதிவு.!