மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணைக் கட்டி கணவரை கடத்திசென்று, மைனா நந்தினி கொடுத்த அசத்தல் சர்ப்ரைஸ்! வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி. மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில், அரண்மனைக்கிளி, சின்னதம்பி, நாம் இருவர் நமக்கு இருவர், டார்லிங் டார்லிங் என ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். மேலும் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா என பல படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை மைனா நந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து மைனா நந்தினி தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் அண்மையில் நந்தினியின் கணவர் யோகேஷ் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நந்தினி யோகேஷின் கண்களை கட்டி, காரில் அழைத்துச் சென்று சிறுவர்கள் இல்லத்தில் வைத்து கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோவை நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், வைரலாகி வருகிறது.