#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொள்ளாச்சி விவகாரம்: அந்தப் பெண்ணின் அழுகுரலைக் கேட்டு தாங்க முடியவில்லை-விஜய் சேதுபதி.!
ஒரு துணை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ஒரு காதல் காவியமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது.
தற்போது மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் போன்ற அப்படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி கூறுகையில், இப்படத்தில் திருநங்கை வேடம் என்பதால் மட்டும் நான் நடிக்கவில்லை. அதன் முக்கியத்துவம் என்ன என்பதை கருத்தில் கொண்டு தான் நடித்தேன்.
திருநங்கையாக நடித்த போது தான் பெண்களின் மீதான மதிப்பு அதிகரித்தது. அந்த வேடத்திலேயே வீட்டுக்கு வந்த போது என்னைப் பார்த்த எனது மகள் ஸ்ரீஜா அப்படியே அழுதுவிட்டாள். எப்போதும் நான் யாருக்கும் போட்டியில்லை. தொடர்ந்து படங்களில் நடித்தால் மட்டும் போதும் என்று தான் நினைத்தேன்.
ஆனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் போராடுவது வேதனையாக இருக்கிறது. அந்தப் பெண்களின் அழுகுரலை 10 நிமிடம் கூட என்னால் கேட்க முடியவில்லை. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.