மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தம்பிக்கு கவனம் இங்கல்ல" - மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் நீக்கம்: இயக்குனர் பளீச் பேட்டி.!
"மஞ்சள் வீரன்" படத்தில் இருந்து தூக்கப்பட்ட டிடிஎப் வாசன் குறித்து இயக்குனர் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார்.
சமூக வலைதளத்தில் பிரபலமான நபராக வலம்வந்த டிடிஎப் வாசன், அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று தற்போது சுவிட்ச் ஆப் மூடில் இருந்து வருகிறார். எனினும், அவ்வப்போது தனது விடீயோக்களை அவர் பதிவு செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பிரபலமாக இருந்து வந்தவர், அவரின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் சில்வண்டுகள் செய்த அட்ராசிட்டியால் வழக்குகளில் சிக்கிக்கொண்டு தற்போது பரிதவித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
படத்தில் இருந்து நீக்கப்பட்டார் டிடிஎப்
தனக்கு கிடைத்த சமூக வலைதள பிரபலம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி பயணத்தை மேற்கொண்டு வந்தவர், அவரின் ஆதரவாளர்களால் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டார். இதனிடையே, டிடிஎப் வாசனை வைத்து இயக்குனர் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட செல்அம் என்பவர், மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கி வழங்குவதாக தெரிவித்தார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் உட்பட பிற செயல்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், டிடிஎப் வாசனை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கியுள்ளதாக செல்அம் அறிவித்து, டிடிஎப் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
வேறொரு நாயகனுடன் மஞ்சள் வீரன் தொடரும்
இந்த விஷயம் தொடர்பாக செல்அம் அளித்துள்ள பேட்டியில், "தம்பி டிடிஎப் வாசன் படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், அவர் படத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதில் வேறொரு நபர் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் புதிய நாயகன், புதிய லுக் அக்.25 அன்று வெளியிடப்படும். தம்பிக்கு பல வேலைகள் இருப்பதால், அவரால் சினிமாவிலும் நடித்துவிட்டு, அவரின் வேலைகளை தொடர முடியவில்லை.
கவனம் இல்லை
நான் எனது படைப்புடன் பயணிக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், தம்பியின் பயணம், கவனம் படைப்பின் மீது இல்லை. தம்பிதான் அடுத்த சூப்பர்ஸ்டார் எனினும், எனது சூழ்நிலைக்கு அவர் தற்போது ஒத்துவரவில்லை. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்யும் தம்பதியே சில நேரங்களில் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். அதேபோலத்தான் இதுவும். வருடத்தின் 5 நாட்களில் மட்டுமே அவர் சிறையில் இருந்தார், எஞ்சிய நாட்களில் அவர் விடுதலையாகி வெளியே இருந்தார். தற்போது வரும் கதாநாயகன் 50 கி.மீ வேகத்திலேயே வாகனத்தை ஓட்டுவார்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: பிரபல நடிகையின் தந்தை தற்கொலை; மாடியில் இருந்து குதித்து சோகம்.!!