மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க வருகிறாள் மூக்குத்தி அம்மன்! அதுவும் எப்போது தெரியுமா? பிரபலம் வெளியிட்ட தகவல்!
ஆர்ஜே பாலாஜி நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதனை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். மேலும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இதில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பே மூக்குத்தி அம்மன் திரைப்படம் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது.
இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்..! 🙏#MookuthiAmman #DiwaliRelease on Disney Plus Hotstar Vip..! ❤️ pic.twitter.com/Vefv0NPhHl
— RJ Balaji (@RJ_Balaji) October 23, 2020
ஆனால் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 25-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளதாக ஆர்.ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.