அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை.! படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ்!!



Music director Ilayaraja send notice to Good bad ugly movie team

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் வசூலையும் வாரி இறைத்து வருகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

Ajith

அதில், என் ஜோடி மஞ்ச குருவி', 'இளமை இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்' என்ற தனது 3 பாடல்களையும் அனுமதியின்றி 'குட் பேட் அக்லி' படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும், அதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தாறுமாறு.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி.! 5 நாட்களில் மட்டும் இவ்வளவு வசூலா??

மேலும் உடனடியாக மூன்று பாடல்களையும் படத்தில் திரையிடுவதை நிறுத்த வேண்டும், 7 நாட்களுக்குள் நிபந்தையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

 

 

இதையும் படிங்க: தாறுமாறு.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி.! 5 நாட்களில் மட்டும் இவ்வளவு வசூலா??