தாறுமாறு.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி.! 5 நாட்களில் மட்டும் இவ்வளவு வசூலா??



blockbuster-collection-of-good-bad-ugly-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் நடிகர் அஜித் குமார் மார்க் ஆண்டனி என்ற வெற்றி படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித்தின் மனைவியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரபு, சிம்ரன், பிரசன்னா, பிரியா வாரியர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான குட் பேட் அட்லி திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளிவந்தது. ஜாலியான என்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் குட் பேட் அக்லி திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.

Good Bad Ugly

அதாவது படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் ரூ 101 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் உலக அளவில் 170 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும், வார இறுதிக்குள் ரூ. 200 கோடியை எட்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!

இதையும் படிங்க: குட் பேட் அக்லீ படத்தின் ஒஜி சம்பவம் பாடல்; லிங்க் உள்ளே.!