மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
90களில் இளசுகளின் கனவு கன்னி நதியாவின் வயது என்ன தெரியுமா.?
80களின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து 90களின் ஆரம்பத்தில் வரை தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் நதியா. சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நதியா தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தமிழில் அதிக அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் நதியா. மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நதியா அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருவார்.
இந்நிலையில் தனது 57ஆவது பிறந்த நாளை கொண்டாடிவரும் நதியா பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.