#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவர்ச்சி புயல் நாகினி நடிகைக்கு விரைவில் திருமணம்!! மாப்பிள்ளை இவரா? கொரோனாவால் அடித்த அதிர்ஷ்டம்!!
ஹிந்தியில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று தமிழில் டப் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் நாகினி. இந்த தொடரில் ஹீரோயினாக, பாம்பாக கவர்ச்சி காட்டி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மௌனி ராய்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் போன்று தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும் மௌனி ராய் பாலிவுட் சினிமாவிலும் தலைகாட்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார். இந்த நிலையில் மௌனி ராய் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை காதலித்து விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மௌனி ராய் துபாய்க்குச் சென்று கொரோனா ஊரடங்கால் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டநிலையில் அவருக்கு தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவர் உதவி செய்துள்ளார். இந்நிலையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி தற்போது திருமணம் வரை சென்றுள்ளது என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.