மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்கு பதில் இந்த முன்னணி நடிகையா! அதுவும் கமலுடன் முதல்முறையாக ஜோடி சேர்கிறாராம்!!
மலையாள சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தில்
மோகன்லால், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் இதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப், இந்த படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் உருவாக்கினார்
அதில் நடிகர் கமல்ஹாசன், கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழிலும் இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தநிலையில் அண்மையில் திரிஷ்யம் 2 அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழில் பாபநாசம் 2 எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பாபநாசம் 2 ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பாபநாசம் படத்தில் ஜோடியாக நடித்த கமல் மற்றும் கௌதமி இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்ட நிலையில், பாபநாசம் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நதியா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 80, 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நதியா அனைத்து பெரிய நடிகர்களுடன் நடித்த நிலையில் கமலுடன் மட்டும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லையாம். பாபநாசம் 2 படத்தில் நடித்தால் இதுவே இருவரும் இணைந்து நடிக்கும் முதல்படம் எனவும் கூறப்படுகிறது.