மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எப்பவுமே அழகுதான்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை மீனாவும், நதியாவும் செய்யும் ரகளையை பார்த்தீர்களா!
மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான திரைப்படம் திரிஷ்யம். இந்தப் படத்தில் ஹீரோவாக மோகன்லால் நடித்திருந்தார். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல், கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
மேலும் சமீபத்தில் மலையாளத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும் திரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் மற்றும் மீனா இருவரும் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகின்றனர்.
Drushyam 2..Reality 😝😄 pic.twitter.com/EpUFsO7Owm
— Meena Sagar (@Actressmeena16) April 15, 2021
இதில் போலீஸ் அதிகாரியாக நடிகை நதியா நடித்து வருகிறார் . இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் மீனா மற்றும் நதியா இருவரும் ஜாலியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் எப்பவுமே அழகுதான் என வர்ணித்து வருகின்றனர்.