திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஷூட்டிங் செல்வதற்கு முன்.! மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்.! செம கியூட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசம் டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. நடிகை நயன்தாரா சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் பிசியாக உள்ளார்.
இரட்டை குழந்தைகள்
அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேய அவர்கள் வாடகைதாய் மூலம் இரட்டை ஆண்குழந்தைக்கு பெற்றோரானர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்கள் மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் சூட்டியுள்ளனர். மேலும் கண்ணும் கருத்துமாக குழந்தைகளை வளர்த்து வருகின்றனர்.
கொஞ்சி விளையாடும் நயன்தாரா
நயன்தாரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தனது பிசினஸ் சம்பந்தமான புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்வார். இந்நிலையில் அவர் தற்போது ஷூட்டிங் செல்வதற்கு முன்பு தனது மகன்களுடன் நேரத்தை செலவிடும் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: நடிகர் தனுஷை மறைமுகமாக குத்திக்காண்பித்த சிவகார்த்திகேயன்? - சமூக வலைத்தளங்களில் கலவரம்.!