மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கங்கனாவைப் பார்த்தால் கன்னத்தில் அறைவேன்!" பாகிஸ்தான் நடிகை ஆவேசம்!
2006ம் ஆண்டு முதல் ஹிந்தித் திரைப்படங்களில் நடித்து வருபவர் கங்கனா ரனாவத். இவர் "கேங்ஸ்டர்" படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். மேலும் "தாம் தூம்" படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து விநாயகர் சதுர்த்திக்கு பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்சுடன் இவர் நடித்த "சந்திரமுகி 2" திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூகப் பிரச்சனைகள் குறித்து சர்ச்சையான கருத்துக்களைக் கூறிவரும் கங்கனா ரனாவத்தை பாகிஸ்தான் நடிகை ஒருவர் கன்னத்தில் அறைவேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். பாகிஸ்தான் நடிகையான நவுஷீன் ஷா, "கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன்.
அப்படி சந்தித்தால் அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன். அவர் எங்கள் நாட்டைப் பற்றி சர்ச்சையான கருத்துக்களைக் கூறி வருகிறார். எதற்காக அவர் எங்கள் நாட்டைப் பற்றி பேச வேண்டும். உங்கள் நாட்டைப் பற்றி பேசுங்கள். உங்கள் திரைப்படங்கள், காதலன் குறித்து பேசுங்கள்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.