#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன இந்த சீரியல் முடிய போகுதா.? சோகத்தில் இல்லத்தரசிகள்.!
கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை ராதிகா. அதன் பிறகு தமிழ் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் நடிகையாக வலம் வந்தார். அதன் பின் சின்னத்திரையில் பல்வேறு நெடுந்தொடர்களில் நடித்தும், தயாரித்தும் வந்தார். இவரது தந்தை மற்றும் சகோதர, சகோதரிகள் என்று அனைவரும் திரைத்துறை பிரபலங்கள் தான் என்பது அனைவரும் அறிந்தது தான்.
விஜயகாந்த், கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதிகா. 1980 மற்றும் 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ராதிகா, தற்சமயம் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கு நடுவே, கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை இவர் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் கூட இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி நெடுந்தொடர் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானார் நடிகை ராதிகா. அதன் பிறகு வாணி ராணி, செல்லமே, அண்ணாமலை, சந்திரகுமாரி உள்ளிட்ட நெடுந்தொடர்களை தயாரித்ததோடு அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் அண்மைக்காலமாக அவர் நெடுந்தொடரில் நடிக்காமல் இருந்து வந்தார். அதன் பிறகு அண்மையில்தான் ஒரு புதிய நெடுந்தொடரில் நடிக்க தொடங்கினார்.
இதற்கிடையில் கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி C/o ராணி என்ற நெடுந்தொடரில் ராதிகா நடித்து வருகிறார். இரவு 8 மணியளவில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில், ப்ரீத்தி சஞ்சீவ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ராதிகா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடர் வாணி ராணி நெடுந்தொடரின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சென்ற ஜூன் மாதம் 22-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நெடுந்தொடர் மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.