பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம்; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அஸ்வந்த் இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் உட்பட பலர் நடிக்க வெளியாகவுள்ள திரைப்படம் டிராகன்.
இவர் நடித்த லவ் டுடே திரைப்படம், இயக்கத்தில் வெளியாகிய கோமாளி திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது கல்பாத்தி ஏஜிஎஸ் கிரியேஷன் தயாரிப்பில் டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: #JustIN: அரசியல் கட்சியில் நேரில் வந்து இணைந்த பிரபல தமிழ் நடிகர்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி ட்விஸ்ட்.!
Happy birthday our producer Agohram sir ♥️ Arajagam in theatres from feb 14 2025 🔥🔥🔥🔥@pradeeponelife @archanakalpathi @aishkalpathi @Ags_production pic.twitter.com/dehMcNATVc
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) January 15, 2025
படம் வெளியீடு அறிவிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், படம் வெளியீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
2025 ம் ஆண்டு காதலர் தினம் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்று பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!