#JustIN: அரசியல் கட்சியில் நேரில் வந்து இணைந்த பிரபல தமிழ் நடிகர்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி ட்விஸ்ட்.!



Actor Power Star Srinivasan Joins IJK 

 

 

தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகராக வலம்வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், தொழிலதிபரும் ஆவார். இவர் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஐ, கவண், சக்கபோடுபோடு ராஜா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!

உடல்நலம் தேறினார்;

அரசியலிலும் ஈடுபாடு கொண்ட நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, குடியரசு கட்சி ஆகியவற்றிலும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். சமீபகாலமாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டவர், மருத்துவ சிகிச்சை பெற்று பின் உடல்நலம் தேறினார். 

இஜக-வில் இணைவு

இதனிடையே, இன்று அவர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். 

இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!