மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் தலைப்பு 'ட்ராகன்'.. ஃபயரான டைட்டில் கேட்ட தயாரிப்பாளருக்கு ஃபயர் காண்பித்த இயக்குனர்.!
கோமாளி படத்தின் மூலமாக திரைப்பட இயக்குனராக அறிமுகமாகி, லவ் டுடே படத்தில் தானே நாயகனாக நடித்து பிரபலமடைந்த நட்சத்திரம் பிரதீப் ரங்கநாதன். விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்தில் நடித்து வரும் பிரதீப், அடுத்தபடியாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத்தின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்குவது உறுதி செய்யப்பட்டது. படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்திற்கு டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள ஏஜிஎஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், தீ போல தலைப்பு கேட்ட தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு இன்ப அதிர்ச் வழங்கிய இயக்குனர், டிராகன் என்ற தலைப்புக்கு தீ வைத்து காண்பித்து அசத்தினார்.
#PradeepAshwathCombo fire ah title ketta fire odave title kudukareengale 🤩! @Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh are happy to present #DRAGON@pradeeponelife @Dir_Ashwath @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @malinavin @nikethbommi… pic.twitter.com/dOnTVhveZ1
— Archana Kalpathi (@archanakalpathi) May 5, 2024