#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
‘வாணி ராணி’ பற்றி சின்னத்திரை நடிகர் பரபரப்பு பேச்சு; அதிர்ச்சியில் சின்னத்திரை
இன்றைய சூழ்நிலையில் சின்னத்திரையில் பல சீரியல்கள் மக்கள் மனதில் மிகவும் பிரபலமாக உள்ளன. இதில் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே நிறைய போட்டிகள் வரும்.
அப்படி மிகவும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் நடிகை ராதிகா நடித்துவந்த ‘வாணி ராணி’. சன்டிவியில் நீண்ட வருடமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் துணை நடிகராக ப்ரித்விராஜ் என்ற நடிகரும் நடித்து வருகிறார்.
ராதிகாவை மையமாக கொண்டே எடுக்கப்பட்ட இந்த சீரியலில் எங்களை டம்மியாகவே இயக்குனர் வைத்துள்ளதாக ப்ரித்விராஜ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடியபோகிறது என்பதை அறிந்த அந்த நடிகர் கூறுகையில் ‘என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி முடிந்தது. அந்த சீரியலில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதனை நடிகைதான் கண்டுபிடிப்பார்கள். அதற்க்கு ஏன் எங்களை டம்மியாக காட்டுகிறார் என தெரியவில்லை. அந்த சீரியல் இயக்குனருக்கு வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை எப்போது பார்த்தாலும் எங்களுக்கு அழுகை சீனாக கொடுக்கிறார்.’ என கூறி சீரியல் தரப்பினரை அதிர வைத்துள்ளார்.