#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிக்கலில் தவிதவிக்கும் தேவயானி.! உதவி செய்ய அதிரடியாக என்ட்ரி கொடுத்த மூன்று பிரபலங்கள்.! வைரல் வீடியோ!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் ஏராளமான சீரியல்கள் வரவேற்பு பெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டளமே உள்ளது. அவ்வாறு மக்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றுதான் புது புது அர்த்தங்கள். இதில் கணவரை இழந்து தனது மகனை வளர்த்து வரும் லட்சுமி கதாபாத்திரத்தில் தேவயானி நடித்து வருகிறார்.
கோலங்கள் தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்தவரே இந்த சீரியலிலும் ஹரி என்ற கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாகும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த நிலையில் லட்சுமிக்கு தனது மகனுக்கே தெரியாமல் அவரது விந்தணுவில் பிறந்த குழந்தை கிடைக்கிறது. அதனை அவர் மிகவும் பாசமாக வளர்த்து வருகிறார். மேலும் அந்த குழந்தைக்காகவே அவர் ஹரியை திருமணம் செய்து கொள்ளவும் ஒத்துக்கொள்கிறார்.
ஆனால் அவரது மகனுக்கு குழந்தை இருப்பது பிடிக்காத நிலையில் அவர் குழந்தையை வெளிநாட்டு தம்பதிகளுக்கு கொடுத்து விடுகிறார். இந்நிலையில் அவருக்கும், ஹரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்பொழுது குழந்தை ஆற்றில் தவறி விழுந்துவிடுகிறது. இந்த நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்த தேவயானி அதற்கு காரணம் ஹரிதான் என அவரை வெறுக்கிறார்.
குழந்தை உயிருடன் ஹரிக்கு கிடைத்தபோது, அவரை சூழ்ச்சியால் நர்மதா என்பவர் திருமணம் செய்து கொள்ள முயல்கிறார். இந்த நிலையில் லட்சுமியை ஹரியுடம் சேர்த்து வைப்பதற்காக மூன்று பிரபலங்கள் புது புது அர்த்தங்கள் தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதாவது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இதில் சஞ்சீவ், விஷ்ணு மற்றும் நக்ஷத்ரா ஆகியோர் தேவயானிக்கு உதவி செய்வதற்காக களமிறங்கியுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.