திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினிக்கு எதிராக கோஷமிட்ட விஜய் ரசிகர்.. வெளுத்து எடுத்த ரஜினி ரசிகர்கள்.!
சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரஜினிக்கு எதிராக கோஷமிட்ட விஜய் ரசிகரை, ரஜினி ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய ஜெயிலர் படத்தின் முதல் காட்சி, தற்போது வரை ஆட்டம் பாட்டத்துடன் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கேற்றார் போல ஜெயிலர் திரைப்படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான விமர்சனங்கள் வருகிறது.
Pavatha Polanthutanuka 😂pic.twitter.com/rJfzWuVzu1
— Karthik 💜🎀 (@_Karthik_Tweets) August 10, 2023
இந்த நிலையில் ஜெயிலர் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள், திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க என்றும், ரஜினி ஒழிக என்றும் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து படம் முடிந்த பிறகு விஜய் ரசிகரை அங்கு காத்திருந்தார் ரஜினி ரசிகர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் 6 பேர் சேர்ந்து, விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்களை தேடி தியேட்டர் முழுவதும் சுற்றி வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.