நடிகர் அஜித்துக்கு கிடைத்த மாபெரும் கெளரவம்.! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து!!



rajini-wish-to-ajith-foe-padmapoosan-award

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித்குமார். அவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸ் போன்றவற்றில் பிஸியாக உள்ளார்.

சமீபத்தில் கூட அவர் துபாயில் நடந்த  கார் ரேஸில் தனது அணியுடன் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அதனை தொடர்ந்து அவர் ஐரோப்பிய கார் ரேஸில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கிடையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை  அறிவித்திருந்தது. அதில் கலை பிரிவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

rajini

இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "அஜித் சாரை வைத்து படம் இயக்கவேண்டும் என்று ஆசை.. ஆனால்" இயக்குநர் லோகேஷ் ஓபன் டாக்.!?

இதையும் படிங்க: சிம்புவின் அடுத்த 3 படங்கள் என்ன? வெளியாகிறது முக்கிய அப்டேட்.. விபரம் உள்ளே.!