மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரிலீசுக்கு முன்பே வசூல் சாதனை படைக்கும் ரஜினியின் ஜெயிலர்.. முன்பதிவில் மட்டும் இத்தனை கோடியா.?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயில் படம் இதுவரை முன்பதிவில் ரூ.122.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, விநாயகன், வி டிவி கணேஷ், மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டங்கள் நடித்துள்ளனர்.
சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பட ரிலீசுக்கு முன்பே ரஜினியின் ஜெயிலர் படம் டிக்கெட் முன்பதிவில் பல கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இதுவரை ஜெயிலர் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் ரூ.122.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.