மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறும் 6 நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த ஜெயிலர்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் 6 நாட்களில் 450 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள்டி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், ரம்யா கிருஷ்ணன், ரித்விக், மிர்னா, சுனில், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படம், பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் மொத்தமாக 450 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் உலக நாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூலை வெறும் 6 நாட்களில் முறியடித்துள்ளது. இதில், விக்ரம் திரைப்படம் மொத்தமாக 450 கோடி வசூல் செய்த நிலையில், தற்போது ஜெயிலர் திரைப்படம் அதனைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.