சாண்டி & ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள நிறம் மாறும் உலகில் படத்தில் ரெங்கம்மா பாடல் வெளியீடு அறிவிப்பு.!



Rangamma Promo from Niram Marum Ulagil Movie 

 

நடிகர்கள் பாரதி ராஜா, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், யோகி பாபு, விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், ஏகன், கனிகா, வடிவுக்கரசி, ஆடுகளம் நரேன், மைம் கோபி, சுரேஷ் சக்கரவர்த்தி என பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில். 

இப்படத்தை பிரிட்டோ ஜேபி இயக்கி இருக்கிறார். சிக்னேச்சர் ப்ரொடெக்சன், ஜிஎஸ் சினிமா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. தேவ் பிரகாஷ் ரெகன் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!

வரும் மார்ச் 07 அன்று திரைக்கு வரும் இப்படத்தின், ரெங்கம்மா என்ற பாடல் வெளியாகியுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர்களுக்காக இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

ரெங்கம்மா பாடல் வரிகளை ஏ.எஸ் தாவுத் எழுதியுள்ளார். அறிவு, தேவ் பிரகாஷ் ஆகியோரின் குரலில் பாடல் உருவாகி வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: குட் பேட் அக்லீ படத்தின் இசையமைப்பு பணிகள் தொடக்கம்; ஜிவி பிரகாஷ் அறிவிப்பு.!