திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தோழிகளுடன் அலப்பறை செய்யும் ராஷ்மிகா மந்தானா.! வைரலாகும் புகைப்படம்.!?
ராஷ்மிகா மந்தானாவின் திரைப்பயணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தனக்கென தனி இடத்தை இந்திய திரைத்துறையில் நிலைநாட்டி இருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் நேஷனல் கிரஷ் என்ற பெயர் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தானா.
கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகா
முதன்முதலில் ராஷ்மிகா மந்தானா க்ரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இதன் பிறகு தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் கதாநாயகியாக கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ராஷ்மிகாவின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. இதன் பிறகு அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு போன்ற பல முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்தார்.
இதையும் படிங்க: நடிகைகளோடு நெருக்கம் காட்டும் விஜய் சேதுபதி.? உண்மையை வெளிப்படுத்திய பிரபலம்.!?
ராஷ்மிகாவின் கோலிவுட் திரைபயணம்
இந்நிலையில் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தானா. இதன் பிறகு தமிழில் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் குபேரன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
இவ்வாறு சினிமாவில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பிஸியான நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தானா, தன் தோழியின் திருமணத்திற்காக கர்நாடகா சென்றுள்ளார். அங்கு அவர் வித்தியாசமாக சேலை அணிந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: வைரலாகும் சமந்தாவின் பதிவு.! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!?