திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகைகளோடு நெருக்கம் காட்டும் விஜய் சேதுபதி.? உண்மையை வெளிப்படுத்திய பிரபலம்.!?
விஜய் சேதுபதியின் திரைப்பயணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் முதன் முதலில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் மிகப்பெரும் இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை அளித்து வந்தார் விஜய் சேதுபதி.
வில்லனாக மாறிய விஜய் சேதுபதி
இவ்வாறு தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை அளித்து வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் வில்லன் நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். வில்லனாக இவர் நடிப்பில் வெளியான விக்ரம், ஜவான் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்து விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் 50வது படம்.! ரிலீஸ் எப்போ?? வெளிவந்த சூப்பரான அறிவிப்பு!!
இதன்பிறகு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டே இருப்பதால் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை என்று அறிவித்தார். இதனை அடுத்து தற்போது மகாராஜா என்ற திரைப்படத்தில் நடித்து, இப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. மகாராஜா திரைப்படத்தில் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறார்.
பத்திரிகையாளரின் சர்ச்சை பேச்சு
இது போன்ற நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் என்பவர் விஜய் சேதுபதியை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதாவது, "96 படத்தில் நடிக்கும் போது த்ரிஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்தி பரவியது. ஆனால் விஜய் சேதுபதி இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆனால் விஜய் சேதுபதி நடிகைகளுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி தான் வருகிறார்" என்று கூறி இருப்பது திரைத்துறை வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: கூலி... சூப்பர் ஸ்டாருக்காக லோகேஷ் போட்ட திட்டம்.!! வெளியான சுவாரஸ்யமான தகவல்.!!