அந்த நேரத்துல புருஷன் பயந்து ஓடிட்டாரு.! என்னால மறக்கவே முடியலை.! வேதனையில் கலங்கும் நடிகை ரேஷ்மா!!



reshma-shares-her-painful-moment

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. அதனை தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ள அவர் படங்களிலும் நடித்துள்ளார். அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

ரேஷ்மா பட்ட துயரங்கள் 

பின்னர் ரேஷ்மா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் அமெரிக்காவில் இருந்தேன். எனது கணவர் பாக்ஸராக இருந்தார். அதற்காக அவர் நிறைய மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: வேற லெவல்தான்!! பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சூரியின் கருடன்.! 5 நாட்களில் இவ்வளவு வசூலா??

Reshma

வெளியே வந்த 4 மாத கரு 

இந்நிலையில் நான் நான்கு மாத கர்ப்பமாக இருந்தபோது அவர் என்னை அடித்துவிட்டார்.  குழந்தை வெளியே வந்துவிட்டது. அந்த சமயத்தில் பயந்து அவர் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார். நான் தனியாக காரை எடுத்துக்கொண்டு  மருத்துவமனையில் சேர்ந்தேன். நான்கரை மாத குழந்தையாகதான் ராகுல் பிறந்தான். பின் 9 மாதம் வரை அவன் இங்க்பேட்டரில்தான் இருந்தான். அவனுக்காக நான் பார்க்காத மருத்துவம் கிடையாது. பின்னரே முடியாமல் நான் பெற்றோருடன் இங்கு வந்துவிட்டேன்.

இறந்த முதல் குழந்தை 

ராகுல் பிறப்பதற்கு முன் எனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதனால் ராகுலை எண்ணி பயம்  இருந்தது. என் முதல் குழந்தையை அனைவரும் மறந்துவிட்டனர். ஆனால், என்னால் இன்று வரை அதனை மறக்க முடியவில்லை. வாழ்க்கையில் எல்லோருக்கும் நிச்சயம் ஒரு சோகம் இருக்கும். என் வாழ்க்கையிலும் பல சோகங்கள் உள்ளது என வேதனையுடன் கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: செம ஹாட் செல்லம்... அரைகுறை ஆடையில் ஆளை மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! கிளுகிளுப்பூட்டும் கிளிக்ஸ்!!