35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
ஆர்ஜே பாலாஜி எடுத்த திடீர் முடிவால்.. ஆடிப்போன திரையுலகம்.!
சென்னையைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆர் ஜே பாலாஜி. இவரது பெற்றோர் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆர்.ஜே பாலாஜி கிராஸ் டாக் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கோலிவுட் திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து வந்தார். பின்பு எல்கேஜி என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி நடிக்க தொடங்கினார்.
இந்த வரிசையில் ரன் பேபி ரன் என்ற படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ஜியோன் கிருஷ்ணகுமார் இயக்கி பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூலில் பெரிய சாதனை படைக்கவில்லை என்றாலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு 10 கோடி வரை லாபம் வந்துள்ளது.
இந்த நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஜியோன்
கிருஷ்ணகுமாரை வைத்து மற்றொரு திரைப்படம் தயாரிக்கும் முடிவு எடுத்துள்ளது. ரன் பேபி ரன் படத்தின் பட்ஜெட் 12 கோடி. ஆனால் சாட்டிலைட் உரிமம், தியேட்டர் உரிமம் என்று கிட்டத்தட்ட 25 கோடி வரை கலெக்ஷனை கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு பின் ஆர்ஜே பாலாஜியின் சம்பளம் 4கோடியிலிருந்து 7 கோடியாக உயர்த்தி உள்ளார்.