மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்போதான் கல்யாணமாச்சு.. அதுக்குள்ள விவாகரத்தா?? மனம் வருந்தி பேசிய ரோபோ சங்கர் மகள்!!
தமிழ் திரையலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோசங்கர். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அவர் பின்னர் வெள்ளித் திரையில் காலடிபதித்து ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் இந்திரஜா விருமன் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு அவரது அம்மாவின் தம்பியான கார்த்திக் என்பவருடன் மார்ச் மாதம் 24ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆட்டம், பாட்டு என கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் புதுமண தம்பதிகளும் தொடர்ந்து பல சேனல்களுக்கும் பேட்டியளித்து வந்தனர்.
இந்த நிலையில் திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவர்களது விவாகரத்து குறித்து சர்ச்சையான கருத்துக்களும் பரவி வருகிறது. இது தொடர்பாக இந்திரஜா மற்றும் அவரது கணவர் பேட்டி ஒன்றில்,
எனக்கு ஒருத்தர், இன்னும் எத்தனை நாட்கள் ஜோடியாக பேட்டி கொடுக்குறாங்க பார்க்கலாம். இவர்கள் தனிதனியாக பேட்டி கொடுப்பார்கள். சீக்கிரம் விவாகரத்தாகி விடும் என கமெண்ட் செய்திருந்தார்.
இதுபோன்ற கமெண்ட்டுகளை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. எப்படி உங்களால் இப்படியெல்லாம் கூற முடிகிறது. உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என நினைத்துப்பாருங்கள். என்னுடைய மாமா எனக்கு ஸ்ட்ராங்காக மூன்று முடிச்சு போட்டுள்ளார் என இந்திரஜா கூறியுள்ளார்.