திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
மீண்டும் புதிய சீரியலில் களமிறங்கும் சரவணன் மீனாட்சி ரச்சிதா! புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு.!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களுள் ஒன்று சரவணன் மீனாட்சி. இதில் பல நடிகர்கள் மாறினாலும், தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக மாறாமல் மீனாட்சியாக நடித்தவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி.
ரச்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் அதில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் நிறைவு பெற்றவுடன் சிறிது காலம் இடைவெளி எடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவரது அடுத்த சீரியல் எப்போது என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியநிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ரச்சிதா புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் புதிய சீரியலில் நடிக்க துவங்கியதை புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த சீரியல் குறித்து, எந்த தகவலையும் வெளியிடாமல் காத்திருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.