மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீரியல் நடிகை ஸ்ரீநிதி சொன்னது உண்மையா? என்னதான் ஆச்சு! உண்மையை உடைத்த நடிகை நக்ஷத்ரா! வைரல் வீடியோ.!
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீ நிதி. இவர் சமீப காலமாகவே தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் அண்மையில் வெளிவந்த அஜித்தின் வலிமை படத்தை கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்து ரசிகர்களின் மோசமாக விமர்சனத்திற்கு உள்ளானார்.
பின்னர் அவர் சிம்பு தன்னை காதலிக்கிறார்.என்னை டார்ச்சர் பண்ணுகிறார். அவரிடமே கேளுங்க. நான் பொய் சொல்லவில்லை என கூறியிருந்தார். இதனால் சிம்பு ரசிகர்களிடமும் மோசமாக வாங்கிக் கட்டிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அவர் தனது நெருங்கிய உயிர் தோழியும், நடிகையுமான நக்ஷத்ரா குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில், நக்ஷத்ரா நிறைய தப்பான விஷயங்கள் செய்திருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு இல்லை.
அவள் ஒரு பையனை காதலிக்கிறார். அவர்களுக்கு ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. அந்த நபர் மிகவும் மோசமானவர்.அவரது குடும்பத்தினர் நக்ஷத்ராவை பிடித்து வைத்துள்ளனர். அதனைத் கேட்டால் என்னை அடிக்கிறாங்க. விஜே சித்து நிலைமை நக்ஷத்ராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து நடிகை நக்ஷத்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் பிரச்சினையில் இருக்கேன். நான் லவ் பண்ற பையனோட பேமிலி என்னை எங்கேயும் விடாம இறுக்கி வச்சிருக்காங்கனு தகவல் பரவியது. ஆனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன். சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன். அவ எதோ மன அழுத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து பலரும் என்னிடம் அக்கறையாக கேட்டுள்ளீர்கள். அது ஒரு சாதாரண விஷயம். அதனை பெரிதாக்க வேண்டாம் என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.