மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்த ஜெயிலர் நடிகர்.. காரணம் இதுதானா?
இந்திய சினிமாவில் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மற்ற மொழிகளில் இருந்து நடிகர்களை அழைத்து வருவது வழக்கமாகியுள்ளது. அதற்குக் காரணம் தங்களது திரைப்படங்களை 5 அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்வதால் அதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என மற்ற மொழி சூப்பர் ஸ்டார் நடிகர்களையும் நடிக்க வைக்கின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சிவராஜ் குமார் சமீபத்தில் அடித்த பேட்டி ஒன்றில் அஜித் படம் ஒன்றில் நடித்த தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் நிறைய கன்னட படங்களில் தான் பிஸியாக நடித்து வந்ததால் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த திரைப்படம் என்ன படம் என்று கூட அவருக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.