திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விரைவில் ஹீரோயின்தான்.! நடிகர் கார்த்தியின் ரீல் மகள் இப்போ எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. கடந்த 2011 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் சிறுத்தை. இப்படத்தில் ஹீரோயினாக தமன்னா நடித்திருந்தார்.
மேலும் சந்தானம் காமெடியில் கலக்கி இருந்தார். கார்த்தி டபுள் ஆக்ஷனில் நடித்த இப்படத்தில் அவருக்கு மகளாக குட்டி பாப்பாவாக நடித்தவர் பேபி ரக்ஷனா. சிறுத்தை படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் பின்னர் பெருமளவில் நடிக்கவில்லை.
l
இந்நிலையில் தற்போது நன்கு வளர்ந்து டீன் ஏஜ் பெண்ணாக இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விரைவில் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வரலாம் எனவும் கூறப்படுகிறது.