திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சிறுத்தை. இந்தப் படத்தில் கார்த்தி, தமன்னா, சந்தானம், அவினாஷ், பேபி ரக்ஷனா மனோபாலா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ரக்ஷனா திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த குழந்தையா என வாயடைத்து போயுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகையாக நடிக்கும் அளவிற்கு அவர் முன்னேறியுள்ளார். மேலும் அவர் சிறுத்தை படத்திற்கு பிறகு பாண்டியநாடு, கடல், திரிஷா இல்லனா நயன்தாரா, நிமிர்ந்து நில், ஓகே கண்மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டிகளில் பேசிய பேபி ரக்ஷனா, நான் என்னுடைய மூன்று வயதில் இருந்து எடுக்கிறேன். இடையில் சில காலம் நடன ம் கற்றுக்கொள்ள வேண்டும் என சினிமாவிலிருந்து விலகி இருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு விளம்பரங்களில் நடித்து வந்தேன். தற்போது நான் 11ம் படித்து வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.