மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெங்கட் பிரபுவுக்கு செக் மேட் வைத்த சிவகார்த்திகேயன்.!! கோட் ரிலீஸ்-க்கு பிறகு கூட்டணி உறுதியாகுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சிவ கார்த்திகேயன். எதிர்நீச்சொல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிவ கார்த்திகேயன் அடுத்தடுத்த திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இவர் நடிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகும் சிவகார்த்திகேயன்
இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் வெற்றியை கொடுக்க வேண்டிய முனைப்பில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அமரன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபுவுடன் கூட்டணி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண தமிழ் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: வாவ்... காத்திருக்கும் பிரம்மாண்டம்.!! இந்தியன் 2 விழாவில் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.!!
சிவகார்த்திகேயனின் கண்டிஷன்
இந்தக் கூட்டணிக்காக சிவகார்த்திகேயன் கண்டிஷன் வைத்திருக்கிறாராம். அதன்படி கோட் திரைப்படம் வெற்றிகரமாக ஓடினால் மட்டுமே வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார் என சினிமா வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. ஒருவேளை கோட் திரைப்படம் ஓடவில்லை என்றால் சுதா கொங்காரா உடன் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடடே... படப்பிடிப்பில் திணறிய வெற்றிமாறன்.!! 5 நிமிடத்தில் சரி செய்து அசத்திய மனைவி ஆர்த்தி.!!