மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுவே என் வாழ்நாள் விருப்பம்.. தன் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஸ்ருதிஹாசன் வெளியிட்ட ஸ்வீட்டான பதிவு!!
1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் நடிகர் கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் வித்தியாசமான பல கெட்டப்புகளில் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் நடித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன்
இலட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உலக நாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தனது 65 வருட திரையுலக வாழ்வில் பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் சுருதிஹாசன் தனது அப்பாவுடன் நடப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்து X தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. நீங்கள் அபூர்வமான வைரம். எப்போதும் உங்களது பக்கத்தில் நடப்பதே எனது வாழ்நாள் விருப்பங்களில் ஒன்று. உங்களுடைய மாயாஜால கனவுகள் உங்களது வாழ்க்கையில் நிறைவேறுவதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். லவ் யூ சோ மச் அப்பா" என வாழ்த்து கூறியுள்ளார்.
Happy birthday pa @ikamalhaasan
— shruti haasan (@shrutihaasan) November 6, 2024
You’re a rare 💎 and walking by your side is one of my favourite things to do in life - to many more birthdays and watching all your magical dreams come to life .. love you so much pa 🩶🧿 pic.twitter.com/hJASYttJPJ
இதையும் படிங்க: #JustIN: பாலிவுட் பாஷா., நடிகர் ஷாருக்கானுக்கு 'ஹிந்துஸ்தானி' கொலை மிரட்டல்; ரசிகர்கள் அதிர்ச்சி.!