#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவியின் பிரம்மாண்ட சீரியலில் இருந்து விலகியுள்ள நடிகை ராதிகா; இனி அவருக்கு பதில் யார் தெரியுமா?
இந்திய அளவில் சன் தொலைக்காட்சி முதல் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். இனளஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரும் சன்டிவி சீரியல் பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு சீரியல்கள் மக்கள் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சன்டிவியில் இரவு 9.30 மணி என்றாலே ராதிகாவின் தொடர்தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்தது. சித்தி,அண்ணாமலை,செல்வி, செல்லமே, வாணிராணி,சந்திரகுமாரி என 6850 எபிசோட் நடித்துள்ளார் நடிகை ராதிகா. இவரின் நடிப்பின் திறமையால் முக்கால்வாசி தமிழ் மக்கள் இவருக்கு ரசிகர்களாய் உள்ளனர்.
இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த சந்த்ரகுமாரி தொடர் கடந்த மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து மாலை 6 : 30 மணிக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் சந்திரகுமாரி தொடரை மாலை 6:30 மணிக்கு மாற்றப்பட்டதிலிருந்து இன்றுவரை அந்த தொடரில் காணாமல் போன கதாபாத்திரமாக நடித்துவருகிறார். இனிமேல் அந்த தொடரில் ராதிகா நடிக்கமாட்டார் எனவும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒரு சில காரணங்களால் தற்போது நடித்து வரும் 'சந்திரகுமாரி' சீரியலில் இருந்து விளங்குவதாகவும். இவருக்கு பதில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நடிகை விஜியும், அழகி தொடருக்கு பின் இந்த சீரியலில் நடிக்க வருவது தனக்கு மகிழ்ச்சி என்றும், ராதிகாவிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை ராதிகா திடீர் என வெளியேறி இருப்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
Welcome to the talented @ActorViji with a warm hug and loads of love to #chandrakumari who will bring a fabulous twist to the story. Give her the love you have showed me and welcome her❤️❤️keep watching 👍🏻at 6.30pm🙏🏻🙏🏻
— Radikaa Sarathkumar (@realradikaa) April 1, 2019
After AZHAGHI".Frm today will be on sun TV 6.30pm plwatch CHANDRA KUMARI n sopport, as my beloved sis Radhika tkng a small break n comng bk with a bash again to the same slot I'm shouldering the responsibility of ck.Hugs to the legend Real cklady super star QUEEN of prime times!
— Viji Chandrasekhar (@ActorViji) April 1, 2019