மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி மிஸ் ஆச்சே... இரண்டாம் முறையாக இணையவிருந்த இரண்டு சூப்பர் ஹீரோக்கள்... அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் விக்ரம். இவர்கள் இருவருக்கும் தனித்தனியே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவ்வாறு முன்னணி ஹீரோக்களான இவர்கள் இருவரும் டாப் ஹீரோக்களாக இருந்த போதே இணைந்து நடித்துள்ளனர்.
ஆம் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இப்படத்தில் சூர்யா மற்றும் விக்ரம் இருவருமே தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இப்படத்திற்காக நடிகர் விக்ரமும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான காவியதலைவன் படத்தின் நடிக்க இருந்தது. ஆனால் தேதி பிரச்சனை காரணமாக அவர்கள் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அவர்களுக்கு பதிலாக சித்தார்த் மற்றும் பீரித்விராஜ் நடித்தனர்.