மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கங்குவா பாடலில் கவர்ச்சிக்காட்சிகள் - சென்சார் போர்டு ஆப்பு.. தயாரிப்புக்குழுவுக்கு உத்தரவு.!
திஷா பதானியின் கவர்ச்சிக்கு கட் கொடுத்த சென்சார் போர்டு, பாடலில் இடம்பெற்ற காட்சிகளை துண்டிக்குமாறு அல்லது காட்சிகளை மறுசீரமைப்பு முறையில் ஒழுங்குபடுத்துமாறு படக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளது.
கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, பாபி உட்பட பலர் நடிக்க உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா (Kanguva). படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் எடிட்டிங்கில், மதன் கார்க்கி வசனத்தில் படம் தயாராகி இருக்கிறது.
நவம்பர் 10 ல் படம் வெளியாகிறது
ஆயிரத்தில் ஒருவன் போல, பழங்கால தமிழரின் கதையை கொண்டு தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் ரூ.250 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் நவம்பர் 10 அன்று திரையரங்கில் வெளியாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தி பயர் பாடல் வெளியானது. இன்னும் சில நாட்களில் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீடு விழா நடைபெறுகிறது.
இதையும் படிங்க: எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட காஜல் - சூர்யா.. கணவர், குழந்தையை அறிமுகப்படுத்திய நடிகை.!
யோலோ பாடல் கவர்ச்சி காட்சிகள்
இந்நிலையில், கங்குவா படத்தில் இடம்பெற்றுள்ள யோலோ (Yolo Song Kanguva) படத்தின் பாடல்களில், திஷா பதானியின் உடல் அங்கங்கள் தெரிவதாகவும், அதனை மாற்றி அமைக்குமாறும் அல்லது குறிப்பிட்ட காட்சியை நீக்குமாறும் மத்திய திரைப்படத் தணிக்கைக்குழு படக்குழுவை அறிவுறுத்தி இருக்கிறது.
கங்குவா திரைப்படம் உலகளவில் ரூ.2000 கோடி வரை வசூல் செய்யும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த படம் முப்பரிமாண முறையில் உலகளவில் பல மொழிகளில் வெளியாகிறது. இதனால் படம் வெளியீடுக்கு முன்பே ரூ.300 கோடியை கடந்து ஓடிடி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை ஆட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட காஜல் - சூர்யா.. கணவர், குழந்தையை அறிமுகப்படுத்திய நடிகை.!