" அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
" அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
பிருந்தாவின் குடும்ப பின்னணி
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் தான் சிவகுமார். இவரது மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்திக். இவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு பிருந்தா என்ற தங்கையும் உண்டு. இவர் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.
பின்னணி பாடகியாக..
மேலும் சூர்யாவின் தங்கை பிருந்தாவிற்கு கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் சிவகுமார் பிருந்தாவை நடிக்க வைக்க மறுத்துவிட்டார். இதன் பிறகு 2018 ஆம் ஆண்டு பின்னணி பாடகியாக தனது பயணத்தை ஆரம்பித்து பல திரைப்படங்களுக்கு தொடர்ந்து பாடி வருகிறார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்த படங்களுக்கு ரெடியா? கோவை சூர்யா ரசிகர்கள் செய்த போஸ்டர் சம்பவம்.!
சிறுவயதிலிருந்தே கர்நாடக இசை கற்றுக் கொண்டு வரும் பிருந்தா, நடிப்பதை விட பாடுவதில் தான் ஆர்வம் அதிகம் என்று கூறியுள்ளார். இருந்தபோதிலும் ஒரு சில படங்களிலும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது போன்ற நிலையில் சமீபத்தில் பிருந்தா ஒரு பேட்டியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வைரலான பேட்டி
அதாவது, "நான் பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போது சிவகுமாரின் மகள் தான் என்பது யாருக்கும் தெரியாது. அதை வெளியே சொல்லவும் எனக்கு விருப்பமில்லை. அப்போது என் தோழிகள் என்னுடைய வீடு எங்கே என்று கேட்டார்கள். வீட்டு முகவரியை கூறியவுடன் அங்கேதான் நடிகர் சூர்யாவும் இருக்கிறார். அவரை நீ சைட் அடிப்பியா என்று கிண்டலடித்துள்ளார்கள். இல்லை சூர்யா எனக்கு அண்ணன் மாதிரி என்று சமாளித்து விடுவேன்" என்று பிருந்தா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சூர்யா படத்தில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!