#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#தமன்னா : அம்மாவின் தொல்லையால் எடுத்த திடீர் முடிவு.! ரசிகர்கள் மகிழ்ச்சி.!
தமன்னா மற்றும் விஜய் வர்மா ஜோடி பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக மாறப்போவது எப்போது? என பலர் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார்கள். அது தொடர்பாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒரு காலத்தில் தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. லாஸ்ட் ஸ்டோரிஸ் -2 வெப் சீரிஸுக்கு பின்னர் தேசிய அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை அவர் தக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் நடிகை தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருகிறார்கள்.
இவர்களுடைய திருமணம் தொடர்பான கேள்விகளும் எழுந்து கொண்டு தானிருக்கிறது. இது தொடர்பான கேள்விக்கு தமன்னா பதில் கூறியபோது இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என்று தெரிவித்திருந்தார்.
33 வயதான நடிகை தமன்னா, தற்போது பெற்றோர் வற்புறுத்தியதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அந்த விதத்தில், இவருடைய நிச்சயதார்த்தம் டிசம்பர் மாதத்தில் இறுதி வாரத்தில் அல்லது ஜனவரி மாதம் நடைபெறலாம் என்றும், பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கும் என்று சொல்லப்படுகின்றது. இது தொடர்பாக மிக விரைவில் விஜய் வர்மா மற்றும் தமன்னா ஜோடி அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.