மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வெறும் பத்து நிமிஷத்துக்கு பல கோடி! 'தளபதி 68' படத்தின் புதிய அப்டேட்!
கடந்த அக்டோபர் மாதம் வெளியான "லியோ" திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதையடுத்து , தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தளபதி 68" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டைட்டில் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
படத்தில் ஏகப்பட்ட சி ஜி வேலைகள் உள்ளதாகவும், இதற்காகவே பிரத்தியேகமாக பல டெக்னிகல் வேலைகளை வெங்கட் பிரபு செய்து வருகிறார் என்றும், மேலும் இப்படத்தின் டீ - ஏஜிங் போர்ஷனுக்காக சுமார் 6 கோடி வரை செலவு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் அந்தக் காட்சிகள் படத்திற்கு மிகவும் தேவை என்பதால், தயாரிப்பாளர் எந்தவொரு தடையும் சொல்லவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ப்ரியங்கா மோகனனுக்கு பதில் மீனாட்சி சவுத்ரி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.