திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் ரஜினியின் ஜெயிலர் பட போஸ்டர்! அட.. நடிகர் தனுஷ் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ரஜினி வயதான தோற்றத்தில், கைகளை பின்னால் கட்டியநிலையில் மிரட்டலான தோற்றத்தில் உள்ளார்.
Wow !! pic.twitter.com/5QTMJwR5yS
— Dhanush (@dhanushkraja) August 22, 2022
இந்த நிலையில் நடிகர் ரஜினியின் மூத்த மகளை திருமணம் செய்து பிரிந்தநிலையில் நடிகர் தனுஷ் ஜெயிலர் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, வாவ் என பாராட்டியுள்ளார். அதனை ரஜினி ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.