Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!



  Toxic Movie Yash Birthday Glimpse 

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் யாஷ், கே.ஜி.எப் திரைப்படத்தின் வெளியீடுக்கு பின்னர் பேன் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். கே.ஜி.எப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. 

டாக்சிக் படம்

அதனைத்தொடர்ந்து, கன்னட சினிமாவில் சாக்லேட் நாயகனாக வலம்வந்த யாஷ், அதிரடி ஆக்சன் நாயகனாக அடையாளம் காணப்பட்டார். படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, யாஷ் டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம்; இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் வீடியோ

கேவிஎன் ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில், யாஷ் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை, கீது மோகன் இயக்கி வழங்குகிறார். இன்று யாசின் பிறந்தநாளை முன்னிட்டு, டாக்சிக் படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!