7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம்; இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 



  Director Selvaraghavan Announce 7G Rainbow Colony 

ரசிகர்களின் கோரிக்கை செல்வராகவனை சென்றடைந்து, அதற்கான பணிகள் தொடங்கி இருக்கின்றன.

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகி, கடந்த 15 அக். 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி (7G Rainbow Colony).   

அன்று முதல் இன்று வரை மிகப்பெரிய அளவிலான வெற்றிப்படமாகவும், காதலில் பலரையும் ரசிக்கவைத்து கலங்கவைத்த காவியமாகவும் இருக்கிறது. 

இதையும் படிங்க: புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!

இரண்டாம் பாகம்

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பிரபலமானது ஆகும். இதனிடையே, படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் கேட்டு இயக்குனர் செல்வராகவனிடம் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்குகிறது. செல்வராகவன் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். 

தமிழ் & தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம், அன்றைய காலகட்டத்தில் ரூ.3 கோடி செலவில் எடுக்கப்பட்டு, ரூ.10 கோடியை தாண்டி வசூல் செய்தது. படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!