நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
"நானும் அவர் கிட்ட பலமுறை கேட்டுட்டேன்; ஆனால்.." விஷாலின் திருமணம் பற்றி நடிகை வரலட்சுமி
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியாகிய திரைப்படம் சண்டைக்கோழி-2. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் முக்கியமான வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
வரலட்சுமியும் விஷாலும் நீண்ட நாட்களாகவே நண்பர்களாக பழகி வருகின்றனர். ஒரு சமயத்தில் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூட செய்திகள் பரவின. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமியிடம் விஷாலின் திருமணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி "நானும் அவரிடம் திருமணம் எப்போது செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இப்படியே போய்க் கொண்டிருந்தால் ஒரு சமயத்தில் உங்களுக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என்று கூட சொல்லி பார்த்து விட்டேன். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் உறுதியாக இருக்கிறார்." இவ்வாறு வரலட்சுமி பதிலளித்துள்ளார்.