மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவுடன் ஜோடி போட்டு நடிப்பிங்களா.? பத்திரிக்கையாளரின் காட்டமான கேள்விக்கு பதிலளித்த வரலட்சுமி..
கோலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி இதன்பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்
வரலட்சுமி சரத்குமார் 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இதனையடுத்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு களமிறங்கிய வரலட்சுமி, விஜய் நடித்த 'சர்க்கார்' திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
இந்நிலையில், தற்போது 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். பல கேள்விகளுக்கு பதிலளித்த வரலட்சுமியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் உங்கள் அப்பாவிற்கு ஜோடியாக நடித்தீர்களா? என்று கேட்டுள்ளார். இந்த கேள்வியை சமாளிக்கும் விதமாக அப்பாவிற்கு எப்படி ஜோடியாக நடிக்க முடியும். எந்த ஹீரோவின் படங்களானாலும் முக்கிய கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.