53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
வேட்டையன் படத்திற்கு அதிக விலைக்கு டிக்கெட் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ரமேஷ் திலக், அபிராமி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: Vettaiyan Trailer: அனல் பறக்க மாஸ் காண்பித்த ரஜினிகாந்த்; "வேட்டையன்" படத்தின் ட்ரைலர் இதோ.!
அக்.10 அன்று வெளியீடு
இப்படம் 10 அக்டோபர் 2024 அன்று வெளியாகிறது. படம் ரூ.160 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. வேட்டையனின் பட ரிலீசுக்காக, கங்குவா திரைப்படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின் ட்ரைலர் காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றன.
கூடுதல் கட்டணம் நிர்ணயம்
இந்நிலையில், சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கான ரோஹிணியில், வேட்டையன் படத்திற்கு டிக்கெட் விலை ரூ.390 என நிர்ணயம், செய்யப்பட்டுள்ளது. வரிகள் சேர்த்து ஒரு டிக்கெட் விலை மட்டும் ரூ.450 அளவில் வந்துவிடுகிறது. கோல்ட் எனப்படும் பிரிவில் மட்டும் இந்த கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிற ஸ்க்ரீனில் ரூ.190 கட்டணமே வசூல் செய்யப்படுகிறது.
கோல்ட் பிரிவில் ரூ.390 என நிர்ணயிக்கப்பட்டுள்ள டிக்கெட்டும் விற்பனையாகி வரும் நிலையில், அதில் வரிகள் உட்பட பிற விஷயங்களை மேற்கோளிட்டு, 3டி அமைப்புக்காக என கூடுதல் கட்டணம் வாங்கப்படுவதாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேட்டையன் படத்திற்கு ரோகினி கூடுதல் கட்டணம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
பிற திரையரங்குகளில் ரூ.190 மட்டுமே
சென்னையின் பிரதானமாக ஏஜிஎஸ், அண்ணா சினிமாஸ், பரிமளம், சினிஃபோலிஸ், ஜிகே, ஐநாக்ஸ், காசி, மாயாஜால், நேஷனல், பிவிஆர் ஆகிய திரையரங்குகளே ரூ.190 அதிகபட்ச கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. புக் மை ஷோ கட்டணம் சேர்த்து ரூ.250 க்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்ற நிலையில், ரோகினி ரூ.390 க்கு டிக்கெட் விற்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து ரோகினி தரப்பிடம் களநிலவரம் சேகரிக்கப்படுகிறது...
வேட்டையன் ட்ரைலர் உங்களின் பார்வைக்கு;
இதையும் படிங்க: Vettaiyan: வேட்டையன் படத்தின் முதல் பாடல் வெளியீடு; மாஸ் காண்பித்த மனசிலாயோ.!